பாதி வழியில் நின்ற லிப்ட்… உள்ளே சிக்கிய 10 பெண்கள்! - மயிலாப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பான மீட்பு நடவடிக்கை
Lift stopped halfway 10 women trapped inside Hectic rescue operation Mylapore railway station
சென்னை நகரின் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பறக்கும் ரெயில் நிலையம், தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. அங்கு பயணிகளின் வசதிக்காக இங்கு லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் உடல் நலக்குறைவுள்ளோர் அதிகமாக இதை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று இரவு நிலையத்துக்கு வந்த சில பெண் பயணிகள் லிப்டில் ஏறிச் செல்லும் போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
எதிர்பாராத விதமாக லிப்ட் பாதி வழியிலேயே நின்று விட்டதால், அதற்குள் இருந்த 10 பெண்கள் சிக்கிக் கொண்டு அச்சத்தில் தவித்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
உடனடியாக அங்கு இருந்த பயணிகள் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், லிப்ட் கதவை திறந்து, உள்ளே சிக்கியிருந்த பெண்களை ஒருவர் பின் ஒருவராக பாதுகாப்பாக வெளியேற்றினர்.
சுமார் 20 நிமிடங்களுக்கு நீண்ட மீட்பு முயற்சிக்குப் பிறகு, அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தால் மயிலாப்பூர் பறக்கும் ரெயில் நிலையம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பதற்றமான சூழலில் காணப்பட்டது.
English Summary
Lift stopped halfway 10 women trapped inside Hectic rescue operation Mylapore railway station