தீய சக்தியுடன் கூட்டணியா? கேப்டனின் ஆன்மா மன்னிக்காது! திமுக - தேமுதிக கூட்டணியை கடுமையாக விமர்சித்த பாஜக!
BJP condemn to DMK DMdk alliance
2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் இன்று அதிகாரப்பூர்வமாக கூட்டணி வைத்துள்ளது.
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்ப்பு இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இந்த கூட்டணி குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதில், தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!
கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள் கடைசி மூச்சு வரை தமிழ் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்தவர். ஆனால் இன்றோ அவர் உருவாக்கிய இயக்கம் தீயசக்தியோடு கூட்டணி வைத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
English Summary
BJP condemn to DMK DMdk alliance