'பாஜகவின் தோழமை கட்சியான அதிமுக தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை செய்தது.?' திமுக எம்பிக்கள் கேள்வி..!
DMK MPs question what benefits the AIADMK the BJPs ally has brought to Tamil Nadu
திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பாஜக வெற்றி பெற்றால் மதுரைக்கு மெட்ரோ வரும் எனக் கூறிய பட்னவிஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனேயே மதுரை மெட்ரோவுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வந்தது. திமுக அரசின் அத்தனை கோரிக்கைகளையும் உதாசீனப்படுத்திவிட்டு பாஜக எம்.எல்.ஏ.வந்தால் மதுரை மெட்ரோ கொண்டு வருவோம் என்பதா? என கேள்வி எழுப்பினர்.
அத்துடன், மதுரை, கோவையை விட குறைந்த மக்கள் தொகை உள்ள ஆக்ரா, போபால் ஆகிய இடங்களில், நகர மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு Vs டெல்லி போட்டி என்று திமுக சொல்லி வருவதை பட்னவிஸ் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது என்றும், பட்னவிஸ் மராட்டிய துணை முதல்வராக இருந்தபோது அம்மாநிலத்துக்கான திட்டங்கள் குஜராத்துக்கு சென்றன. மராட்டியத்திற்கு செல்ல வேண்டிய முதலீடுகளை குஜராத்துக்கு அனுப்பியவர் தேவேந்திர பட்னவிஸ். தான் முதல்வராக இருந்த மராட்டியத்துக்கே பட்னவிஸால் எந்த பெரிய திட்டத்தையும் கொண்டு வர முடியவில்லை என்று தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம் சுமத்தி பேசியுள்ளார்.
தனது மாநிலங்களுக்கான திட்டங்கள் பறிபோனதையே தடுக்காதவர்தான் பட்னவிஸ் என்றும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டியதோடு, அதிமுக-பாஜக தோழமையுடன் இருந்தபோதும் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் கொண்டு வருவோம் என பாஜகவினர் கூறுவது கண்துடைப்பு நாடகம் எனவும், நாக்பூருக்கும் கீழடிக்கும் இடையேயான தேர்தல் என்று கூட சொல்லலாம். மதச்சார்பற்ற சமூகத்தை கீழடி நாகரிகம் பிரதிபலிக்கிறது. மராட்டியத்திற்கே ஒன்றும் செய்யாத பட்னவிஸ் தமிழ்நாட்டிற்கு வந்து திட்டம் தருவோம் என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமாக இருக்கும் நாக்பூர் கீழடி இடையேயான சித்தாந்த மோதல் இது. தமிழ்நாட்டையும் முதலமைச்சரையும் பார்த்து பயப்படுகிறார்கள் என்றும், இந்தியாவுக்கு வருவாய் ஈட்டி தருவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், மாநிலத்திலேயே வருமானத்தை பெருக்கி திட்டங்களை செல்படுத்தி வருகிறது திமுக அரசு என்று தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கலாநிதி வீராசாமி பேசுகையில் கூறயியதாவது; தனது மாநிலங்களுக்கான திட்டங்கள் பறிபோனதையே தடுக்காதவர்தான் பட்னவிஸ் என்றும், தமிழ்நாடு என்பது திராவிடக் கோட்டை. தமிழ்நாட்டுக்கு பிரதமர் எத்தனை முறை வருகிறாரோ அந்த அளவுக்கு திமுக வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாஜகவின் தோழமை கட்சியான அதிமுக தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை செய்தது.? 2004 முதல் தொடர்ச்சியாக பாசிச பாஜகவை வலிமையுடன் எதிர்த்து வரும் ஒரே இயக்கம் திமுக பேரிடர் நிதி, கல்வி நிதி, ஜல் ஜீவன் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கான நிதி ஆதாரம் வரவில்லை என்று கூறியுள்ளார்.
English Summary
DMK MPs question what benefits the AIADMK the BJPs ally has brought to Tamil Nadu