அம்மா கதாபாத்திரத்தின் ஸ்டீரியோடைப் உடைக்க வந்தேன்..! -ரக்ஷனா ‘மருதம்’ அனுபவம்
I came to break stereotype mother character Rakshanas Marutham experience
இயக்குநர் வி. கஜேந்திரன் இயக்கத்தில், தயாரிப்பாளர் சி. வெங்கடேசன் தயாரித்திருக்கும் 'மருதம்' திரைப்படம், விவசாயிகளின் வாழ்க்கையும், நிலத்தின் அவசியத்தையும் உணர்த்தும் வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. இதில் விதார்த், ரக்ஷனா, அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படம் வரும் 10-ந்தேதி திரைக்கு வருகிறது.

சென்னையில் நடைபெற்ற இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகை ரக்ஷனா தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"மருதம் என் 2வது படம். இப்படத்தில் விதார்த் போன்ற திறமையான ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கனவில்கூட நினைக்கவில்லை.
அவர் அமேசிங்கான நடிகர், அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ஒரு சிறிய கிராமத்தின் அழகை மிக இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும்,கடும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தாலும்,அந்த சவால்கள் எல்லாம் மறந்து நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது" என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,"குழந்தைக்கு அம்மாவாக எப்படி நடித்தீர்கள்? என்று பலர் என்னைக் கேட்கிறார்கள். இதுவரை திரையில் அம்மா கதாபாத்திரம் ஒரு ஸ்ட்ரீயோடைப் மாதிரி காட்டப்பட்டிருக்கிறது. அதை உடைக்கவேண்டும் என்று நினைத்தேன்.
அம்மாவின் உலகத்தை உண்மையிலேயே வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த வேடம் எனக்கு கிடைத்தது. அந்த கனவு மருதம் மூலம் நிறைவேறியது. படம் மிக அற்புதமாக வந்துள்ளது. அனைவரும் கண்டிப்பாக ரசிப்பார்கள்" என்று ரக்ஷனா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
English Summary
I came to break stereotype mother character Rakshanas Marutham experience