ரிஷப் ஷெட்டி பேச்சால் கிளம்பிய சர்ச்சை – ‘கந்தாரா: அத்தியாயம் 1’ புறக்கணிப்பு டிரெண்ட்! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ‘கந்தாரா: அத்தியாயம் 1’ திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஆனால், படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பே, சமூக வலைத்தளங்களில் ‘BoycottKantaraChapter1’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணின் சமீபத்திய படம் ‘They Call Him OG’ கர்நாடகாவின் சில பகுதிகளில், குறிப்பாக பெங்களூரில் திரையிடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவன் கல்யாண் ரசிகர்கள் கர்நாடகாவில் போராட்டங்கள் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலாக, தெலுங்கு திரையுலக ரசிகர்கள், கன்னட படங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக வலைத்தளங்களில் முன்வைத்தனர். அந்த கோபத்தின் தாக்கம் தற்போது ‘கந்தாரா: அத்தியாயம் 1’ மீது விழுந்துள்ளது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், ரிஷப் ஷெட்டி ஜூனியர் என்.டி.ஆர். உடன் கலந்துகொண்டார். அப்போது ரசிகர்கள், தெலுங்கில் பேசுவார் என எதிர்பார்த்த நிலையில், ரிஷப் ஷெட்டி,“நான் கன்னடத்தில் தான் பேசுவேன். அப்படித்தான் என் இதயத்தில் இருப்பதை வெளிப்படையாகப் பகிர முடியும்,”என்று கூறினார்.இந்த உரை, அங்கு இருந்த ரசிகர்களை மட்டுமின்றி, தெலுங்கு சமூக வலைத்தள பயனர்களையும் கடுமையாகக் கோபமடையச் செய்தது.

ஹிந்தி மற்றும் தமிழ் ப்ரோமோஷன்களில் அந்தந்த மொழியில் பேசிய ரிஷப் ஷெட்டி, ஏன் தெலுங்கு ப்ரோமோஷனில் மட்டும் கன்னடத்தில் பேசியார்?இதனால், தெலுங்கு ரசிகர்களை அவர் அவமதித்தார் என குற்றம் சாட்டப்படுகிறது.ரசிகர்கள், கந்தாரா படக்குழு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

சர்ச்சைகள் நிலவினாலும், ‘கந்தாரா: அத்தியாயம் 1’ படத்திற்கு முன்பதிவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்திய அளவில் மட்டும் முன்பதிவில் ₹4.2 கோடி வசூலாகியுள்ளது.இது, 2022 ஆம் ஆண்டு வெளியான முதல் ‘கந்தாரா’ படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

ஒருபுறம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவ மற்றொரு புறம், மொழி தொடர்பான சர்ச்சை காரணமாக தெலுங்கு சமூக வலைத்தளங்களில் புறக்கணிப்பு கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சர்ச்சை படத்தின் வசூலை பாதிக்குமா அல்லது ரசிகர்கள் இறுதியில் திரையரங்குகளுக்கு திரளுமா என்பது அக்டோபர் 2 வெளியீட்டுக்குப் பிறகே தெரிய வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversy sparked by Rishabh Shetty speech Kandhara Chapter 1 boycott trend


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->