12 ஆண்டு காதல் முடிவு! ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து இன்று தீர்ப்பு ..!
12 years of love ended GV Prakash and Sainthavis divorce verdict today
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனக்கென வலுவான இடத்தை பிடித்தவர் 'ஜி.வி. பிரகாஷ் குமார்'. கடந்த 2013-ஆம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்ட அவர், இருவருக்கும் 'அன்வி' என்ற மகள் உள்ளார்.
ஆனால், 12 வருட திருமண வாழ்க்கைக்குப் பின், கடந்த சில மாதங்களாகவே ஜோடி இடையே பிளவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் இருவரும் ஒரே காரில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தை சென்றடைந்து, பரஸ்பர ஒப்பந்த விவாகரத்து மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 25-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினர்.
அப்போது, “மகள் அன்வியை சைந்தவி கவனிப்பதில் எனக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை” என்று ஜி.வி. பிரகாஷ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனால், அனைவரும் கவனித்து வரும் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு, இன்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வெளியாக உள்ளது.
English Summary
12 years of love ended GV Prakash and Sainthavis divorce verdict today