இன்க்யூபேட்டரில் தீ விபத்து! புதிதாய் பிறந்த குழந்தை உயிரிழப்பு...! - மருத்துவ அலட்சியமா? - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் மனதை பதற வைக்கும் சோக சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தனியார் மருத்துவமனையில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன புதிதாய் பிறந்த பெண் குழந்தை, மருத்துவ அலட்சியத்தால் தீ விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அருண் நிஷாத் – பிட்டு தம்பதியருக்கு ஆரோக்கியமாக பெண் குழந்தை பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். பிறந்த உடனேயே குழந்தையின் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த ‘வார்மர்’ கருவியில் வைத்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு கருவியில் தீப்பற்றி, அதில் இருந்த குழந்தை தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்தது.

மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயம் என்ன வென்றால், இந்த விபத்து குறித்து மருத்துவமனை நிர்வாகம் பல மணி நேரம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. பின்னர் உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும், ஆத்திரமடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து, மருத்துவ அலட்சியம் நடந்ததா? பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பன குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire in incubator Newborn baby dies Medical negligence


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->