காதலர் தின சலுகை! ஒயின் வாங்கினால் பீர் இலவசம்...?- புதுச்சேரி மதுக்கடைக்கு அதிகாரிகள் ‘நோ’...! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி என்றாலே கடற்கரை, காபி கலாசாரம், பிரெஞ்சு கட்டிடங்கள் மட்டுமல்ல… குறைந்த விலையில் கிடைக்கும் மதுபானங்களும் அதன் தனி அடையாளமாகவே பார்க்கப்படுகின்றன.

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா,தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வார இறுதிகளில் மதுப்பிரியர்கள்  கூட்டமாக புதுச்சேரி நோக்கி படையெடுப்பது வழக்கம்.

அதிலும், குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் நகரம் முழுவதும் ‘ஹாலிடே மூட்’ காட்சியளிக்கிறது.மது விற்பனை தான் இந்த யூனியன் பிரதேசத்தின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்று.

கடந்த சில ஆண்டுகளாக விற்பனை கணிசமாக உயர்ந்து, கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,100 கோடி வருமானத்தை எட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்,சுற்றுலா வளர்ச்சியுடன் சேர்ந்து, பண்டிகை நாட்கள், சிறப்பு தினங்களில் கூட மதுக்கடைகள் வாடிக்கையாளர்களை கவர சலுகை அறிவிப்பதும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு மதுக்கடை ‘ஒரு முழு பாட்டில் ஒயின் வாங்கினால் 4 டின் பீர் இலவசம்’ என்ற அதிரடி சலுகையை அறிவித்து பலகை வைத்தது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீப்பிடித்தபடி பரவி, வாடிக்கையாளர்கள் கடைக்கு திரளத் தொடங்கினர்.

இதையடுத்து தகவல் அறிந்த கலால் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி, விசேஷ தினங்களில் சலுகை விலையில் மதுபானம் விற்பனை செய்வது விதிமுறைக்கு எதிரானது என எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகளின் உத்தரவுக்கு பிறகு உடனடியாக அந்த ‘ஆஃபர்’ வாபஸ் பெறப்பட்டது. சலுகையை எதிர்பார்த்து வந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Valentine Day offer Buy wine and get free beer Puducherry liquor store gets no


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->