நடுரோட்டில் அவசர லேண்டிங்! சிறிய ரக விமானம் 3 கார்கள் மீது மோதி பெரும் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் எதிர்பாராத பதற்றக் காட்சி ஒன்று அரங்கேறியது. திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.

மேலும், பைலட் அவசர முடிவாக நடுரோட்டிலேயே தரையிறக்கினார். சில விநாடிகளில் நடந்த இந்த திடீர் தரையிறக்கம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

மேலும், தரையில் இறங்கியதும் விமானம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் சென்றுகொண்டிருந்த மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அதிர்ஷ்டவசமாக பெரிய உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என காவலர்கள் தெரிவித்தனர்.

இந்த திகில் தருணங்கள் பதிவான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, “சினிமாவையே மிஞ்சிய ரியல் காட்சி” என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Emergency landing middle road Small plane crashes 3 cars causing huge commotion


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->