இலங்கை, நேபாளம் போல் தமிழ்நாட்டில்... ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பதிவு!
TVK Aadhav Arjuna TNGovt DMK
தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. “பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி” என்ற தலைப்பில் அவர் எக்ஸ் பக்கத்தில் இரவு 11.29 மணிக்கு ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது… ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறினால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும் ஜென்-ஸீ தலைமுறையும் ஒன்றிணைந்து அதிகாரத்திற்கு எதிராக எழுச்சியை உருவாக்கினால், அதுவே ஆட்சி மாற்றத்திற்கும் அரச பயங்கரவாதத்திற்கும் முடிவுரையாகும்” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இளைஞர் எழுச்சிகள் நிகழ்ந்ததைப் போல இந்தியாவிலும் புரட்சி உருவாகும் என சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் பதிவுக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்ததால், 12 மணிக்கு இலங்கை, நேபாளம் போன்ற சொற்களை நீக்கி மாற்றிய பதிவை வெளியிட்டு பின்னர் முழுமையாக நீக்கினார்.
இளைஞர்களை கலவரத்திற்குத் தூண்டும் விதமாகப் பார்க்கப்படும் இந்த பதிவு, சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்டாலும் அரசியல் வட்டாரத்தில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது.
English Summary
TVK Aadhav Arjuna TNGovt DMK