ஸ்டாலின் அரசுக்கு எதிராக யார் பேசினாலும் சிறை தான் பரிசு... அதிமுக கொந்தளிப்பு!
ADMK Condemn to DMK MK Stalin karur
அதிமுக விடுத்துள்ள அறிக்கையில், "பத்திரிகையாளர் திரு. பெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு சிறை தான் பரிசு. இது ஒன்றும் புதிதல்ல.
தற்போது கரூர் துயரத்தில் திமுக அரசு மீது மக்கள் எழுப்பும் சந்தேகங்களை வெளிப்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மக்களிடையே நிலவும் குழப்பங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது பத்திரிகையாளர் கடமை. அதைத் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை.
மாறாக, பாசிசப் போக்குடன், கேள்வி கேட்கும் பத்திரிகையாளரை கைது செய்வது கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்கள் தான் இன்னும் அரசியல் சந்தேகங்களை மக்களிடையே வலுப்பெறச் செய்யும்.
பத்திரிகையாளர் திரு. பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin karur