பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி; 99 பேர் படுகாயம்.!!  - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா நகரமான சிடோர்ஜோவில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்த போது திடீரென பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் ராட்சத கான்கிரீட்கள் சரிந்ததால் ஏராளமான மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனே போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவர் பிணமாகவும், 99 மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் 65 மாணவர்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:- "இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் தண்ணீரை வழங்கி அவர்களை உயிருடன் வைத்திருக்கிறோம். 

அவர்களை மீட்க போராடி வருகிறோம். உயிருடன் இருப்பவர்களைக் காப்பாற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்றுத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

one student died and 99 students injured for school building collapse in indonesia


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->