4வது ஆண்டை கடந்தும் தீவிரம் குறையாத போர்...! கீவ் பிராந்தியத்தை குறிவைத்து ரஷியா தாக்குதல்..! - 4 பேர் பலி - Seithipunal
Seithipunal


ரஷியா-உக்ரைன் போர் நான்காவது ஆண்டை கடந்தும் தொடர்ந்து தீவிரமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பலமுறை அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை முயற்சிகள் இதுவரை எந்தத் தீர்வையும் உருவாக்கவில்லை.இந்நிலையில் ரஷியா, உக்ரைன் நாட்டின் எரிசக்தி மற்றும் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வந்தாலும், ரஷியாவின் தொடர்ச்சியான தாக்குதல்களை முழுமையாக தடுக்க முடியாமல் பெரும் சேதங்களை சந்தித்து வருகிறது.நேற்றிரவு முதல் இன்று காலை வரை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் கீவ் பிராந்தியத்தில் உள்ள நான்கு மாவட்டங்கள் கடுமையாக தாக்கப்பட்டன.

இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கீவ் பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகளை திட்டமிட்டு குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியதாக விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இந்த தாக்குதல் மீண்டும் உலக கவனத்தை அந்தப் போரின் தீவிரத்துக்கு திருப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

War Rages Unabated Fourth Year Russia Targets Kyiv Region 4 Killed


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->