இண்டிகோ விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல் - அதிர்ச்சியில் பயணிகள்.!!
bomb thread to indigo flight
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்தனர்.
இதையடுத்து விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்க உத்தரவிட்டனர். அதன் படி விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
bomb thread to indigo flight