விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க யூடியூபில் புதிய வசதி.!!
new plan intro in you tube for without vedio
இணையதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக யூடியூப் உள்ளது. இந்த யூடியூப்பில் பயனர்களும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். இந்த வீடியோக்களில் இடையிடையே விளம்பரங்களும் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்கள் பயனர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் உள்ளன. இந்த விளம்பரங்களை இல்லாமல் வீடியோ பார்க்க வேண்டும் என்றால் யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரைப் செய்திருக்க வேண்டும். மேலும், பேக்கிரவுண்ட் பிளே ஆப்ஷனையும் பயன்படுத்தவும் முடியும். ஆனால் இதன் கட்டணம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், பயனர்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையில், குறைந்த கட்டணத்துடன் கூடிய புதிய பிளானை யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்கள் பார்க்கும் வசதி மட்டுமே கொண்ட பிரீமியம் லைட் என்ற பிளானை ரூ.89 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்த பிளானில் யூடியூப் மியூசிக், பேக்கிரவுண்ட் பிளே போன்ற வசதிகள் கிடைக்காது.
English Summary
new plan intro in you tube for without vedio