புதிய சாலை அமைக்கும் பணி..எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார் !
The work of constructing a new road Oppositional leader Siva has inaugurated it
வில்லியனூர் வி. மணவெளி கிராமத்தில் ரூ. 25 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !
வில்லியனூர் சட்டமன்ற தொகுதி வி. மணவெளி கிராமத்திற்கு உட்பட்ட பைரவி தேவி மற்றும் நாராயணசாமி நகர்களுக்கு ரூபாய் 20 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் தார் சாலை மற்றும் திருக்காஞ்சி மெயின் ரோடு, 5–வது குறுக்குத் தெருவில் ரூபாய் 4 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை என மொத்தம் ரூபாய் 24 லட்சத்து 53 ஆயிரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இதில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தர்மராஜ், கலியபெருமாள், சபாபதி, வாசு, பாலகுரு, ராஜேந்திரன், வேல்முருகன், கந்தசாமி, வடிவேலு, ரமேஷ், பூபாலன், முருகன், கிருஷ்ணா, மணி, தாமஸ், சுசீந்திரன், ஜான் போஸ்கோ, திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் அக்பர், கிளைக் கழக நிர்வாகிகள் ராஜி, ரபீக், மிலிட்டரி முருகன், ஹரி, முருகேசன், சுரேஷ், சகாபுதீன், முத்து, பாலமுருகன், பாலு, ராமஜெயம், ரகு, பூபாலன், மாதவன், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
The work of constructing a new road Oppositional leader Siva has inaugurated it