கரூர் சம்பவம் - தவெக நிர்வாகிகள் இருவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.!!
15 days court custody to tvk excuetives in karoor incident
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜை கைது செய்தனர்.

இந்த நிலையில், இன்று மதியழகன் மற்றும் பவுன்ராஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
15 days court custody to tvk excuetives in karoor incident