தேங்காய் போளி இப்படி செய்து பாருங்கள் சுவை அள்ளும்.!!
coconut poli recepie
தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு அல்லது மைதா மாவு, மஞ்சள் தூள், நெய், தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய், சுக்குத்தூள்.
செய்முறை:-
முதலில் கோதுமை மாவுடன் மஞ்சள் தூள், நெய் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி போன்று பிசைந்து கொள்ள வேண்டும் அதன் மேல் நல்லெண்ணெய் தடவி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு வெல்லத்தை போட்டு பாகு காய்ச்ச வேண்டும்.
அந்த பாகில் தேங்காய் துருவல், சுக்குத்தூள், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி ஆற வைத்து கொள்ள வேண்டும்.
இதனை பிசைந்து வைத்துள்ள மைதா மாவில் கலந்து மீண்டும் சப்பாத்தி போல் உருட்டி தோசை தவாவில் போட்டு சுட்டு எடுத்தால் சுவையான தேங்காய் போளி தயார்.