அக்டோபர் 3-வது வாரம் வடகிழக்கு பருவமழை..வானிலை மையம் கணிப்பு!
Northeast monsoon in the third week of October Meteorological department forecast
அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 02 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 03-ஆம் தேதி வாக்கில் காலை கரையை கடக்கக்கூடும்.இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் படிப்படியாக விலகி வருவதால் தமிழகத்தில் அக்டோபர் மாதம் 2-வது வாரம் வாக்கில் விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளது. அக்டோபர் 12-ந் தேதி முதல் 14-ந்தேதி இடையே விலகுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் 20-ந்தேதிக்குள் முழுமையாக விலகி விடும் என்றும் அதனை தொடர்ந்து வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியவுடன் அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
English Summary
Northeast monsoon in the third week of October Meteorological department forecast