அக்டோபர் 3 ஆம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!
tamilnadu govt announce october 3 public holiday
அக்டோபர் 1ம் தேதி நாளை ஆயுத பூஜை விடுமுறையாகவும், அக்டோபர் 2ம் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்கள் நாளை புதன் மற்றும் நாளை மறுநாள் வியாழக்கிழமை வருவதனால் வரும் அக்டோபர் 3ம் தேதியான வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்தது
இதற்கு அடுத்த நாளான அக்டோபர் 4,5ம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன. இந்த நிலையில், அக்டோபர் 3ம் தேதி ஒருநாளை மட்டும் விடுமுறையாக அரசு அறிவித்தால் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் என்ற சூழ்நிலை நிலவியது. மேலும், தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவர்கள் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அக்டோபர் 3ம் தேதியான வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்தது. இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
English Summary
tamilnadu govt announce october 3 public holiday