கரூர் கூட்ட நெரிசல்..பாஜகவை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் திடீர் ஆய்வு!
Crowd congestion in Karur Following BJP Congress officials conduct a surprise inspection
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது.
கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தநிலையில் கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணையை நடத்தி வருகிறார். இந்தநிலையில்,
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி எம்.பி. , விஜய் வசந்த் எம்.பி., ராபர்ட் புரூஸ் எம்.பி.ஏ. ஆகியோரும் கூட்ட நெரிசல் பகுதியை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் நேரில் சந்தித்து கே.சி.வேணுகோபால் ஆறுதல் கூறினார்.
English Summary
Crowd congestion in Karur Following BJP Congress officials conduct a surprise inspection