ஆறுதல் கூட சொல்லாமல் தொண்டர்களை விட்டுவிட்டு செல்வது... விஜய்க்கு கண்டனம் தெரிவித்த கனிமொழி! - Seithipunal
Seithipunal


கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில். த.வெ.க. தலைவர்கள் அரசு மற்றும் காவல்துறை மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்து கனிமொழி எம்.பி.யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதில்: பாதிக்கப்பட்ட மக்களுடன் முதலில் நின்றது திமுகவும் அரசாங்கமும் தான். மக்களின் உயிர் மற்றும் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே இப்போதைய முக்கிய செயல். அடிப்படையில் எல்லோரும் மனிதாபிமானம் கொண்டே செயல்பட வேண்டும். உண்மைகள் அனைத்தும் விசாரணை முடிவில் வெளிப்படும், யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் பழி சுமத்துவது தேவையற்றதும் தவறானதுமாகும். மக்களோடு சேர்ந்து அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்வதே கடமையாக இருக்க வேண்டும். 

ஆனால் அந்த கட்சி தலைவர் அங்கு இருந்து ஆறுதல் சொல்லாமல் விட்டு செல்வது, தன்னுடைய பாதுகாப்பை மட்டும் கருதுவது சரியானதல்ல. அவர் நேரில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் தனது கட்சியின் பிற தலைவர்களை அனுப்பியிருக்க வேண்டும்.

நான் அங்கு சென்றபோது கூட அந்தக் கட்சியின் தலைவர்கள் யாரும் இல்லாததைப் பார்த்தேன். அது மனிதாபிமானம் குறைவாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. மற்ற கட்சித் தலைவர்கள் கூட மக்களோடு இருந்து உதவி செய்தனர் என கனிமொழி தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur Stampede Kanimozhi MP Vijay 


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->