ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்..பாகிஸ்தானுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
Protest against encroachment in Kashmir Growing opposition to Pakistan
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
உணவுப் பொருள் மற்றும் மின்சாரத்துக்கு மானியம், பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 12 இடங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை வலியுறுத்தி அவாமி செயற்குழு என்ற குடிமக்கள் சமுதாய கூட்டணி முன்வைத்தது போராட்டம் நடத்தினர்.அப்போது அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் அரசுடன் இந்தக் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து போராட்டம் அங்கு தீவிரம் அடைந்துள்ளது. போராட்டச் சூழல் காரணமாக, ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. தொலைபேசி சேவைகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
English Summary
Protest against encroachment in Kashmir Growing opposition to Pakistan