குடும்பப் படங்களின் நாயகன்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது...இதெல்லாம் இயக்குநர் வி சேகர் இயக்கிய படங்களா?
The hero of family films No matter how many times you watch it you never get bored Are these all films directed by director V Shekhar
தமிழ் சினிமாவில் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, சிக்கனம், பாசம் என சாதாரண நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையை இயல்பாகப் படம் பிடித்து காட்டிய இயக்குநரான வி. சேகர் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் இயக்கிய படங்கள் இன்றும் குடும்பத் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே பிரபலமாக உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் தெய்வானத்தம் கிராமத்தைச் சேர்ந்த வி. சேகர், முதலில் மக்கள் நல்வாழ்வு துறையில் மலேரியா தடுப்பு அலுவலராக பணியாற்றினார். அதன் பிறகு ஏவிஎம் ஸ்டூடியோவில் மாமாவின் உதவியால் வேலைக்கு சேர்ந்தார். பி. லெனின், கே. பாக்கியராஜ் போன்ற முன்னணி படைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றியது அவரை இயக்குநர் பக்கம் இட்டுச் சென்றது.
1990-ல் வெளிவந்த நீங்களும் ஹீரோதான் படத்தில் கவுண்டமணி–செந்தில் நகைச்சுவை பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதன் அடுத்த படமான நான் புடிச்ச மாப்பிள்ளை மிகப்பெரும் ஹிட்டாகி, தெலுங்கு, இந்தி, ஒடியா ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
1990 முதல் 2000 வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு படமாவது இயக்கியவர் வி. சேகர்.திருவள்ளூர் கலைக்கூடம் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல குடும்பப் படங்களை உருவாக்கினார்.
அவரின் படங்கள் அனைத்தும் நடுத்தர குடும்பங்களின் வாழ்நிலை பிரதிபலிப்பவை.
பிரபலமான படங்கள்:
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
பொறந்த வீடா புகுந்த வீடா
நான் பெத்த மகனே
எல்லாமே என் பொண்டாட்டிதான்
ஒன்னா இருக்க கத்துக்கணும்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
வரவு எட்டணா செலவு பத்தணா
விரலுக்கேத்த வீக்கம்
சிக்கனம், குடும்ப ஒன்றுபாடு, வேலைவாய்ப்பின்மை, அரசியல் மோசடிகள்—இவற்றை நகைச்சுவை கலந்த சமூகச்செய்திகளாக மாற்றியவர் வி. சேகர்.
தேவா இசையமைத்த காலம் மாறிப்போச்சு படத்தில்
வடிவேலு பாடி நடித்த “வாடி பொட்டபுள்ள வெளிய” இன்றும் வைரல் பாடலாக ஓடிக்கொண்டே வருகிறது.
சரத்குமார் நடித்த ஏய் படத்தை தயாரித்தார்
சரவணப் பொய்கை (2014) – மகன் கார்ல் மார்க்ஸை ஹீரோவாக வைத்து இயக்கியது
வீட்டுக்கு வீடு, பொறந்த வீடா புகுந்த வீடா போன்ற சீரியல்களும் அவரின் படைப்புகள்
2015-ல் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.
பல ஆண்டுகளாக உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் குடும்ப உணர்வுகளை நகைச்சுவையுடன் இணைத்து தனித்துவ கையொப்பம் பதித்த இயக்குநர் வி. சேகர் மறைவால், திரைத்துறையில் ஒரு முக்கியமான காலம் முடிவுக்கு வந்துள்ளது.
English Summary
The hero of family films No matter how many times you watch it you never get bored Are these all films directed by director V Shekhar