பீகார் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்குமா? 68 ஆயிரம் பேர் பணியில் இறங்கினர்! - கே என் நேரு - Seithipunal
Seithipunal


கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.நேதுஞ்செழியன் (கே.என்.நேரு) பேசியதாவது,“கோவையின் பெருமையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் செம்மொழி பூங்கா திறப்பு விழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இம்மாதம் 26-ஆம் தேதி கோவைக்கு வருகை தந்து நடத்த உள்ளார்.

பூங்கா பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விளையாட்டு மையம், வாட்டர் கார்டன் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் மட்டும் நிறைவு வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.167.25 கோடிக்கு கூடுதலாக ரூ.47 கோடி வழங்கப்பட்டு வேகமாக கட்டுமானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது,"பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக வட்டாரங்கள் கூறினாலும், தமிழக மக்களின் நம்பிக்கையும் ஆதரவும் திமுகவின் பக்கம் உறுதியாக உள்ளது.

வரவிருக்கும் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மாபெரும் அளவில் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு பி.எல்.ஓ நியமனம் செய்து, மொத்தம் 68,000 பேர் பணி புரிகின்றனர்.

இதுவரை 90% விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் எந்தவித குளறுபடியும் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். புதிய வாக்காளர்களை சேர்க்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் அதிகளவு நீர் சேமிக்க தேவையான பணி எடுக்கப்படும்.

மேலும் கோவை, மதுரை நகரங்களில் குப்பையை மின்சாரமாக மாற்றும் மேகா திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும்,” என அமைச்சர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Bihars victory resonate Tamil Nadu 68 thousand people started work K N Nehru


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?




Seithipunal
--> -->