சென்னை சவுகார்பேட்டையில் கேஸ் வெடிப்பு விபத்து...! - நகைப்பட்டறை உரிமையாளர் பலி...6 பேர் காயம்....!
Gas explosion accident Sougarpet Chennai Jewelry shop owner killed 6 injured
சென்னை சவுகார்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ‘சாய் வாக்ஸ்’ நகைப்பட்டறையில் திடீரென சிலிண்டர் கேஸ் கசிவு ஏற்பட்டதால் பயங்கர வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. கண நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து சுற்றுப்புறத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த வெடிப்பில் கடுமையாக காயமடைந்த நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையும் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், பட்டறையில் பணிபுரிந்த அரவிந்த், சூரஜ், ஆனந்த், இந்திரஜித் உள்ளிட்ட ஆறு ஊழியர்கள் காயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Gas explosion accident Sougarpet Chennai Jewelry shop owner killed 6 injured