கூட்டணி பேச்சுவார்த்தை நடுவே ராகுல் காந்தி சென்னை வருகை ....! – அரசியல் கணக்குகள் மாறுமா?
Rahul Gandhis visit Chennai amidst alliance talks political calculations change
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களத்தில் கூட்டணி கணக்குகள் சூடு பிடித்து வருகின்றன. தொகுதி பங்கீட்டை மையமாகக் கொண்டு கூட்டணி கட்சிகள் இடையே தீவிர ஆலோசனைகள் நடைபெற்று, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், தி.மு.க.–காங்கிரஸ் இடையிலான தொகுதி உடன்பாடு இதுவரை இறுதி செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கான அழைப்பும் இன்னும் விடுக்கப்படாததால், மார்ச் 5-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெறும் தமிழக காங்கிரஸ் கிராமக் குழு நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனால், கூட்டணி முடிவை எதிர்நோக்கும் அரசியல் சூழல் மேலும் பரபரப்பாக மாறியுள்ளது.
தரப்பு காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது
இதற்கிடையில், கடந்த 22-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து, கூட்டணி தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கியுள்ளார். அதில், காங்கிரஸுக்கு 41 சட்டமன்றத் தொகுதிகள், 2 ராஜ்யசபா இடங்கள், உள்ளாட்சி தேர்தல்களில் கணிசமான பங்கு மற்றும் ஆட்சியில் அதிகாரப் பங்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்து ஆலோசனை நடத்தியதும் அரசியல் முக்கியத்துவம் பெற்றது.
பின்னர் அளித்த பேட்டியில், “ஆட்சியில் பங்கு விரும்பாத கட்சி ஏதேனும் இருக்கிறதா? நாங்கள் அறக்கட்டளை நடத்த வரவில்லை” என வெளிப்படையாகக் கூறி, காங்கிரஸின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.மேலும், 12 முதல் 20 சதவீதம் வரை வாக்கு வங்கி இருப்பதாகவும், 22 ஆயிரம் கிராமக் குழுக்கள், 63 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் என வலுவான அமைப்பு கட்டமைப்பு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்களது பலத்தை மற்ற கட்சிகளும் உணர்ந்து திறந்த அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால், தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி உறவு ‘மதில் மேல் பூனை’ நிலைபோல் தெளிவற்ற சூழலில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஆட்சியில் பங்கு குறித்து இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது பேச்சுவார்த்தையை சிக்கலாக்கியுள்ளது.முன்னதாக ஜனவரியில் ராகுல் காந்தி சென்னை வருவதாக இருந்த நிகழ்ச்சியும் கூட்டணி உறுதி ஆகாததால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மார்ச் 5-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெறும் தமிழக காங்கிரஸ் கிராமக் குழு நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனால், கூட்டணி முடிவை எதிர்நோக்கும் அரசியல் சூழல் மேலும் பரபரப்பாக மாறியுள்ளது.
English Summary
Rahul Gandhis visit Chennai amidst alliance talks political calculations change