கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுகெலும்பு சரிந்தது...! - சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நேரில் அஞ்சலி
backbone communist movement collapsed Superstar Rajinikanth pays tribute person
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101), வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.அவரது மறைவு செய்தி தமிழகம் முழுவதும் ஆழ்ந்த சோகத்தையும் இரங்கலையும் ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் இருந்து அவரது உடல், சென்னை தியாகராயர் நகர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் சென்னை தி.நகர் சிபிஐ அலுவலகமான ‘பாலன் இல்லம்’ சென்றடைந்து, மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வு, நல்லகண்ணுவின் பொதுச்சேவைப் பயணத்திற்கான மக்களின் மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
English Summary
backbone communist movement collapsed Superstar Rajinikanth pays tribute person