திருப்பதி உண்டியல் காணிக்கை மோசடி வழக்கை கண்டறிந்த விஜிலென்ஸ் மரணம்: கொலையா..? தற்கொலையா..? ஓடும் ரயிலில் இருந்து பொம்மையை வீசி போலீசார் தீவிர விசாரணை..!
Police are actively investigating the mysterious death of the vigilance officer who uncovered the Tirupati banknote offering fraud case
திருப்பதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் நடந்த மோசடியை கண்டறிந்த விஜிலன்ஸ் அதிகாரி சதீஸ்குமாரின் மர்ம மான முறையில் மரணமானது குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஓடும் ரயிலில் இருந்து அவர் தள்ளிவிடப்பட்டாரா என்ற கோணத்தில் ஓடும் ரயிலில் இருந்து பொம்மை ஒன்றை தள்ளி போலீசார் குறிப்புகளை எடுத்துக்கொண்டு விசாரணை நடத்துகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணத்தை திருடிய வழக்கில் எழுத்தர் சி.வி. ரவிக்குமாரை அப்போதிருந்த விஜிலன்ஸ் அதிகாரியான சதீஸ்குமார் கையும் களவுமாக பிடித்ததோடு, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இவர் தற்போது தாடிபத்ரி ரயில்வே காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்த மோசடி குறித்து கூடுதல் டி.ஜி.பி. ரவிசங்கர் அய்யனார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராக சதீஸ்குமார் தாடிபத்ரி- திருப்பதி ரயிலில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் புறப்பட்டார். மறுநாள் காலை தாடிபத்ரி- குத்தி மார்க்கத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, அவரது சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சதீஸ்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது, தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சதீஸ்குமார் மரணமடைந்த சம்பவத்தை மறுகாட்சி அமைக்கும் விதமாக ஓடும் ரயிலில் இருந்து பொம்மைகளை தூக்கிவீசி டிரோன் கேமரா உள்ளிட்ட பல்வேறு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. இந்த காட்சிகளை வைத்து வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
English Summary
Police are actively investigating the mysterious death of the vigilance officer who uncovered the Tirupati banknote offering fraud case