இங்கிலாந்தில் குழந்தைககளை கொன்றதாக ஆயுள் தண்டனை பெற்ற செவிலியர்: ஆதரவாக களமிறங்கிய 200 செவிலியர்கள்; உண்மையில் நடந்தது என்ன..?
200 nurses in England march in support of nurse sentenced to life in prison for infanticide
இங்கிலாந்தில், மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளைக் கொன்றதாக நர்ஸ் லூசி லெட்பி என்பவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் கொலைகள் நடந்த மருத்துவமனையின் தோல்விகளை ஆராய, தனியாக ஒரு பொது விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், லெட்பியின் வழக்கறிஞர் குழு, சில இறப்புகள் இயற்கையான காரணங்களால் அல்லது மோசமான சிகிச்சையால் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறி புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், குறித்த வழக்கு தற்போது குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது.
அத்துடன், இந்த வழக்கில் லூசி லெட்பிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பாதுகாப்பற்றது என்றும், அது தங்களுக்குப் பெரும் கவலையை அளிப்பதாகவும் கூறி, சுமார் 200 நர்சுகள் இந்த வழக்கில் சுயாதீன மறுஆய்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இவர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களைக் கொண்ட ஒரு குழுவின் அங்கமாக உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'இந்தத் தீர்ப்பு மறுக்க முடியாத ஆதாரங்களை விட, சூழ்நிலை சாட்சியங்களையும், சர்ச்சைக்குரிய மருத்துவக் கருத்துக்களையுமே பெரிதும் நம்பியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், மருத்துவமனையின் அமைப்பு ரீதியான குளறுபடிகளே குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம் எனவும் வாதிடுகின்றனர். இருப்பினும், லெட்பியின் மீதான குற்றச்சாட்டு, விரிவான ஆதாரங்களின் அடிப்படையில் நேர்மையாக நிரூபிக்கப்பட்டதாகக் காவல்துறையும், அரசு வழக்கறிஞர் சேவையும் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
200 nurses in England march in support of nurse sentenced to life in prison for infanticide