மதுரை சித்திரை திருவிழா 2026; ஏப்ரல் 19-ஆம் தேதி தொடக்கம்; அட்டவணை வெளியீடு..!
Madurai Chithirai Festival 2026 schedule released
இந்தாண்டுக்கான மதுரை சித்திரை திருவிழா அடுத்த மாதம் கோலாகலமாக தொடக்கவுள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்படும் இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் இந்தாண்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் 19-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றமும், ஏப்ரல் 26-இல் பட்டாபிஷேகமும் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 28-இல் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 29-இல் திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 1, 2026 அன்று நடைபெறள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
Madurai Chithirai Festival 2026 schedule released