சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது..!
10 Bangladeshis arrested for illegally entering India
சட்டவிரோதமாக மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவிய வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேற்கு வாங்க போலீசார் கூறியதாவது;
''மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள இந்தியா - வங்கதேச எல்லையில் அமைந்துள்ள உமர்பூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் சட்டவிரோதமாக ஊடுருவியது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் தங்குவதற்கு இடம் கொடுத்த 02 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
10 Bangladeshis arrested for illegally entering India