டிரம்புக்கு 217 கோடி ரூபாய் வழங்கும் யூடியூப்!
YouTube trump USA
அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தார்.
இதன் விளைவாக அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றக் கட்டிடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் அனைத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டன. குறிப்பாக, அவரது யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து டிரம்ப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, டிரம்ப் மீது விதிக்கப்பட்ட தடைக்கு நஷ்டஈடு வழங்க யூடியூப் சம்மதித்துள்ளது. அதன்படி, டிரம்புக்கு 24.5 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் 217 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.