சமூக விரோதிகள்.. கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்.. அரசியல் பழிவாங்கள்... முன்ஜாமின் கோரி புஸ்சி ஆனந்த் மனு!
TVK Vijay Karur Stampede Bussy Anand
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மத்திய மாநகர நிர்வாகி பவுன்ராஜும் போலீசாரால் பிடிக்கபட்டார்.
இதேசமயம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
புஸ்சி ஆனந்த் தனது செல்போனை அணைத்து தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்மல் குமாரும் தேடுபடையில் உள்ளார்.
இந்நிலையில் முன்ஜாமின் கோரி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கலின் காரணமாக தங்கள் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும், கூட்டம் அதிகரித்தபோதும் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததே நெரிசலுக்கான முக்கிய காரணம் எனவும் அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் சமூக விரோதிகள் திட்டமிட்டு கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் அனுப்பி கலவரத்தை உருவாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
English Summary
TVK Vijay Karur Stampede Bussy Anand