திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாகுமாரி மீனவர்கள்...! கிடுகிடுவென உயர்ந்த மீன் விலை...!
Kanyakumari fishermen launch sudden protest Fish prices have risen sharply
கன்னியாகுமரி மாவட்டம் பெரியநாயகி தெருவில் அரசு பரிந்துரைப்படி மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடி தொழில் செய்வதற்காக தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் குறுகலாக அமைக்கப்பட்டதால் மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று புகார்கள் எழுந்து வந்தது.

ஆகையால் மீனவர்கள், பாலத்தை மேலும் நீட்டித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதனை வலியுறுத்தி மீனவர்கள் சுமார் 5000 பேர், கன்னியாகுமரியை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மற்றும் வள்ளம் மீனவர்கள் இன்று "திடீர்" என்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக நாட்டுப்படகு, வள்ளம் போன்றவை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல விசைப்படகுகள் அனைத்தும் சின்ன முட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி கிடக்கிறது.
மீன் வரத்தும் அடியோடு நின்று விட்டதால், கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மீன் சந்தைகள் களையிழந்து காணப்படுகிறது.இதனால் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டு, மீன்விலையும் "கிடுகிடு" என்று உயர்ந்துள்ளது.இது மீன் விரும்பிகளுக்கு ஒரு கடினமான நேரமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Kanyakumari fishermen launch sudden protest Fish prices have risen sharply