பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு பதிவு - நடந்தது என்ன?
police case file against actor swetha menan
மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்வேதா மேனன், ரதிநிர்வேதம், சால்ட் அண்ட் பெப்பர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது அடுத்த படமான "கரம்" செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், பிரபல நடிகை ஸ்வேதா மேனன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, நடிகை ஸ்வேதா மேனன் நிதி ஆதாயத்திற்காக ஆபாச திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்ததாக கூறி எர்ணாகுளம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒரு சமூக ஆர்வலர் அளித்த புகாரின் படி, எர்ணாகுளம் சிஜேஎம் நீதிமன்றம் உள்ளூர் போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, அவர் மீது ஆபாசத்தைத் தடுக்கும் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 15ஆம் தேதி மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான அம்மா நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தச் சங்கத்திற்கான தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிடும் நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police case file against actor swetha menan