சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக களமிறங்கவிருக்கும் மாஸ் ஹீரோ...!
mass hero about to play villain for Sivakarthikeyan
தமிழ்திரையுலகின் முன்னணி நடிகரான 'சிவகார்த்திகேயன்' தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக தாயாராக இருக்கிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்துள்ளார்.மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர்,வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இது கஜினி படம் போன்ற திரை கதையையும் துப்பாக்கி படத்தின் ஆக்சனையும் சேர்த்த கதைக்களமாக இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர். முருதாஸ் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்திற்கு பிறகு 'குட் நைட்' பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுடன் 'சிவகார்த்திகேயன்' இணையவுள்ளார். இவருக்கு வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யாவை படக்குழு நாடியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும்,ஹூரோவாக நடித்து அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஆர்யாவை, வில்லனாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.
English Summary
mass hero about to play villain for Sivakarthikeyan