மக்களே உஷார்! வாட்ஸ்அப் பயனர்களே இத பண்ணாதீங்க! புதிதாக வந்த 'மோசடி எச்சரிக்கை'! எப்படி தப்பிப்பது தெரியுமா?
People beware WhatsApp users donot do this The new fraud alert has arrived
ஆன்லைன் மோசடிகள் உலகமெங்கும் அதிகரித்து வரும் சூழலில், தனது பயனர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது, பயனர்கள் அறிமுகமில்லாத நபர்களால் குழுக்களில் சேர்க்கப்படுவதை தடுக்க ஒரு புதிய எச்சரிக்கை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம், பயனர்களை குழுவில் சேர்க்கும் முன், குழுவின் விவரங்கள் உள்ளிட்ட எச்சரிக்கை அறிவிப்பு வரவுள்ளது. இதில் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை, உங்கள் தொடர்புகளிலிருந்து யாராவது அந்த குழுவில் உள்ளார்களா, குழு தொடங்கிய தேதி போன்ற விவரங்கள் வழங்கப்படும்.
மோசடிகள் குறைவாகவேண்டும் என்ற நோக்கில்
வாட்ஸ்அப்பை முதலீட்டு மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் சிலர், குழுக்களில் பயனர்களை சேர்த்து, பின் வேறு ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்ய தூண்டி பண மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இதனைத் தடுக்கும் வகையில், பயனர்கள் சாட் பார்க்காமலே குழுவிலிருந்து வெளியேறும் வசதியும் இந்நடையில் அளிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கில் தடை செய்யப்பட்ட பயனர் கணக்குகள்
மெட்டா வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, கடந்த மாதம் மட்டும் இந்தியாவில் 9.8 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. தவறான தகவல் பரப்பல், வதந்தி, விதிமீறல்கள் போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட சாட்களுக்கும் பாதுகாப்பு விரைவில்
தனிப்பட்ட உரையாடல்களிலும் இந்நிலையைப் பயன்படுத்தும் முயற்சியில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. பயனர்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்க, எதிர்வினை அடிப்படையிலான எச்சரிக்கைகள் வழங்கும் அம்சங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய பாதுகாப்பு அம்சம், வாட்ஸ்அப்பை மேலும் நம்பத்தகுந்த, பாதுகாப்பான செயலியாக மாற்றும் முயற்சியில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
English Summary
People beware WhatsApp users donot do this The new fraud alert has arrived