அப்போ விஜய்... இப்போ SK...! மீண்டும் வில்லனாக நடிக்கும் வித்யூட் ஜம்பால்...!
Vijay now Sk Vidyut Jampal play villain again
தமிழ் திரையுலக முன்னணி நடிகர் ''சிவகார்த்திகேயன்'' மற்றும் நடிகை 'ருக்மணி வசந்த்' நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ''மதராஸி''.இப்படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இதில் பிரபல பாலிவுட் நடிகர் 'வித்யுத் ஜம்வால்' சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தில் நடித்துள்ளார்.இவர் இதற்கு முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ''துப்பாக்கி (2012) '' படத்தில் வில்லனாக நடித்து கலக்கி இருந்தார்.
அதன் பிறகு,கடைசியாக சூர்யாவுடன் ''அஞ்சான்'' (2014) படத்தில் நடித்திருந்தார்.தற்போது அவர் ''மதராஸி'' படத்தின் மூலம் முருகதாஸுடன் 2 -வது முறையாக இணைந்துள்ளார்.
இப்படம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.இதற்கு இன்னும் 30 நாட்களே இருக்கும் நிலையில் வித்யுத் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இது தற்போது ரசிகர்களிடையே படத்தின்மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
English Summary
Vijay now Sk Vidyut Jampal play villain again