நடன புயல்கள் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர்... War2 படத்தில் முதல் பாடல் டீசர்...! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர், இந்தி திரையுலகில் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் 'வார் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷனின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். அயன் முகர்ஜி இயக்க இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரித்தது.

இப்படத்தில் 2 ராணுவ வீரர்கள் வெவ்வேறு இலக்கை நோக்கி பயனிக்க இருவருடைய மனநிலை மற்றும் கோட்பாடுகள் வெவ்வேறாக இருக்கையில் என்ன நிகழ போகிறது என்பதுதான் கதை.

இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் 1 வாரமே இருக்கும் நிலையில் படத்தின் பாடலான ''ஜனாப் -இ -ஆலி'' பாடலின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் ஹ்ரித்திக் மற்றும் junior NTR இருவரும் மிகவும் அசத்தலான நடனாம் ஆடுகின்றனர். இந்த காட்சிகள்தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dance storms Hrithik Roshan and Jr NTR First song teaser from movie War2


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->