கழுத்தை நெரித்த கடன் தொல்லை - ஐ.டி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு.!!
it employee sucide in erode for not pay loan amount
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை அருகே கைகோல் பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையங்கிரி மகன் பொன் கார்த்திக். பொறியியல் பட்டதாரியான இவர் திருச்சி ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதற்காக பொன் கார்த்திக், ரவி ஆனந்த் என்ற நண்பருடன் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுவிட்டு வந்தார். இந்த நிலையில் பொன் கார்த்திக் நேற்று வெகு நேரமாகியும் வேலைக்கு வரவில்லை.

இதனால், அவருடன் வேலை பார்க்கும் நண்பர் அவரைத் தேடிச் சென்றப்போது அறையில் பொன் கார்த்திக் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், பொன் கார்த்திக் கடன் தொல்லையால் தற்கொலை செய்தது தெரியவந்தது. அதாவது, பொன் கார்த்திக்கு ஆன்லைனில் கடன் வாங்கும் பழக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில் இந்தக் கடன் தொகையை அவரால் திரும்பச் செலுத்த இயலவில்லை.
இதனால் மனம் உடைந்து போன அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவர் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
it employee sucide in erode for not pay loan amount