ஸ்ரீ சர்வ சக்தி மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா..சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
Sri Sarva Sakthi Mariamman Temple Aadi Festival Many devotees participated in the Shakti Calling event
சேலம்அருள்மிகு ஸ்ரீ சர்வ சக்தி மாரியம்மன் திருக்கோயில் 60ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
சேலம், மரவனேரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சர்வ சக்தி மாரியம்மன் திருக்கோயில் ஆடிப் பண்டிகை நடைபெற்று வருகின்றது. இதனை, முன்னிட்டு அம்மனுக்கு பூச்சாட்டுதல், படி பூஜை, வளைகாப்பு நிகழ்ச்சி, சிறப்பு பூஜை, கஞ்சிக்கலையம் எடுத்தல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பின்னர், தீர்த்த குடம், பால்குடம் ஊர்வலம், அழகு குத்துதல், 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும், அம்மனுக்கு சீர் அழைத்தல், அகல் விளக்கு தீபம், முளைப்பாரி, அம்மன் சிலை அலங்காரம், திருவிதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பின்னர், அம்மனுக்கு பூபந்தல் அமைத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அக்னிகரகம், பூங்கரகம், நாவலகு குத்துதல் மற்றும் மாணவ, மாணவியர், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு பரிசளிப்பு விழா, மாபெரும் சத்தாவரணம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதனை, திரு.செங்கோடன் (ஆதிதிராவிடர் குழு பகுதி அமைப்பாளர்) ஊர் கோவில் நிர்வாகிகள் திரு.நாராயணி பூபதி, தர்மகர்த்தா திரு.சதீஷ்குமார், கானியாசி திரு.பெரியசாமி, பட்டக்காரர் திரு. கந்தசாமி, பெரிய தனக்காரர் திரு. இளஞ்செழியன், கோவில் பூசாரி திரு.விஜயகுமார், திரு.பெருமாள், பூ.பூசாரி ராசுக்குட்டி, கரக பூசாரி.கோவிந்தராஜ், மணியக்காரர்.உதயச்சந்திரன், ஊர் காரியக்காரர். மதலை முத்து, விழா குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்.
English Summary
Sri Sarva Sakthi Mariamman Temple Aadi Festival Many devotees participated in the Shakti Calling event