கை-ரிக்க்ஷா புழக்கத்திற்கு தடை: நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்கு பின்பும் மாறாத வறுமை: நீதிபதிகள் வேதனை..!
Supreme Court rules against hand rickshaw movement
மகாராஷ்டிரா மாநிலம் மதேரன் என்ற சுற்றுலா நகரத்தில் கை ரிக்ஷா பயன்பாடு தற்போது நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றதில் விசாரணைக்கு வந்த நிலையில், அம்மாநிலத்தில் கைரிக்ஷா பயன்பாட்டிற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் விசாரணையின் போது நீதிபதிகள் சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு மனிதனை உக்கார வைத்து இன்னொரு மனிதன் இழுத்து செல்லும் கை ரிக்ஷா வண்டிகள் எப்படி அனுமதிக்க படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன், வாழ்வாதாரத்திற்காக மக்கள் இத்தகைய முறையை தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் இது தனிநபர்களின் கண்ணியத்தை மீறும் செயல் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வளந்து வரும் இந்தியா போன்ற நாட்டில் மனித கண்ணியம் என்ற அடிப்படையான கருத்துக்கு எதிராக இந்த நடைமுறை உள்ளதாகவும் இதனை அனுமதிப்பது அரசியல் அமைப்பு உறுதி செய்துள்ள சமூகப்பொருளாதார நீதிக்கு எதிரானது என்று நீதிபதிகள் கூறி, கை ரிக்ஷா திட்டத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்தவேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வாறு கை ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்றும் அவர்களின் மறுவாழ்விற்கு உடனடியாக நிதி ஒதிக்கீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் மாநில அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 1973 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியின் போது கை ரிக்ஷா ஒழிக்கப்பட்டு அதற்கு மாற்றாக சைக்கிள் ரிட்ச வழங்கப்பட்ட,மை குறிப்பிடத்தக்கது.
English Summary
Supreme Court rules against hand rickshaw movement