இந்தியாவிற்கு 50 வீதம் வரி விதிப்பு: அமெரிக்காவின் இந்த முடிவு கொஞ்சம் கூட நியாயமற்றது, நேர்மையற்றது: வெளியுறவு அமைச்சகம்..!
The US decision to impose a 50 percent tax is unfair and dishonest says the Ministry of External Affairs
அமெரிக்க அதிபர் டோனல் ட்ரம்ப் இந்தியா பொருட்களுக்கும் மேலும் 25 சதவீதம் வரி உயர்த்தி அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இந்நிலையில் இந்தியாவின் பொருட்களுக்கு தற்போது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்திருக்கும் முடிவு நியாயமற்றது மற்றும் நேர்மையற்றது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அத்துடன், தேசத்தின் நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், இன்று கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பல நாடுகள் தங்களின் தேசிய நலனுக்காக நடவடிக்கை எடுக்கும் போது, இந்தியாவின் நடவடிக்கைக்கு மட்டும் கூடுதல் வரி விதிப்பது என்ற அமெரிக்காவின் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், அவரின் இந்த நடவடிக்கை, நேர்மையற்றதோடு அதனை நியாயபடுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உரிய காரணம் இல்லாதது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை சமீப நாட்களாக, அமெரிக்கா குறிவைத்து வருகிறதாகவும், இந்த விவகாரத்தில் எங்களின் நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்ட நிலையில், இது நமது இறக்குமதி சந்தை காரணிகளை அடிப்படையாக கொண்டவை. இந்தியாவின் 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The US decision to impose a 50 percent tax is unfair and dishonest says the Ministry of External Affairs