துர்நாற்றம் வீசும் சென்னை: ''குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா முதல்வரே..?'' நயினார் நாங்கேந்திரன் கேள்வி..!
Nayinar Nankendran questions the Chief Minister regarding the sanitation workers strike which continues for the fifth day in Chennai
சென்னையில் ஐந்தாவது நாளாகத் தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், தலைநகரமே குப்பைக் கூளமாக உருமாறிக் கிடக்கிறது. குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா முதல்வரே..? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-
சென்னையில் ஐந்தாவது நாளாகத் தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், தலைநகரமே குப்பைக் கூளமாக உருமாறிக் கிடக்கிறது. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் மலையாகக் குவிந்து கிடக்கும் குப்பைகளைத் தாண்டி குதித்துச் செல்கிறார்கள். சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் துர்நாற்றம் பொறுக்காமல் மூக்கை மூடிக் கொள்கின்றனர். எங்கு எப்போது என்ன பெருந்தொற்று உருவாகுமோ என அனைவரும் பதற்றத்தில் உள்ளனர்.

ஆனால், சென்னை மேயர் திருமதி. ப்ரியா ராஜன் உள்ளிட்ட, ஆளும் அறிவாலயம் அரசைச் சேர்ந்த அதிகாரிகளோ, அமைச்சர்களோ, முதல்வரோ போராடுபவர்களின் கோரிக்கைகளுக்கு இதுநாள் வரை செவிமடுக்கவில்லை. குறைந்தபட்சம் அவர்களை நேரில் சென்று சந்தித்து சமாதானம் செய்யவும் இல்லை.
பெருகிவரும் குப்பைகளால் வரப்போகும் ஆபத்தை அறியாமல் தங்கள் வீடு, இடம், அலுவலகம் ஆகியவை மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என போராட்டக்காரர்களையும் பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் ஒருசேர அலட்சியப்படுத்தும் திமுக அரசு, மக்களிடம் இருந்து இன்னும் எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் திருந்தப் போவதில்லை..! அடுத்த முறை அரியணை ஏறும் வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை..! என்று நயினார் நாகேந்திரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nayinar Nankendran questions the Chief Minister regarding the sanitation workers strike which continues for the fifth day in Chennai