தமிழீழ பிரச்சினை குறித்து அவதூறு காட்சிகள்..? விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தமிழக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு தாக்கல்..! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள  திரைப்படம் கிங்டம் ஜூலை 31-ஆம் தேதி வெளியானது.  இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தமிழக திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பட விநியோக நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு குறித்த விசாரணை விரைவில் வரவுள்ளது.

கிங்டம் திரைப்படம் தமிழகத்தில் 250 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தமிழ் ஈழ பிரச்னை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, தமிழகத்தில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: படம் முழுக்க முழுக்க கற்பனை கதையை கொண்டது. தமிழீழ பிரசிச்னை குறித்த உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை. முறையாக தணிக்கை சான்று பெற்று படம் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு படம் திரையிடப்படுவதை தடுக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிங்டம் படத்தை பெருந்தொகை செலவிட்டு உருவாக்கி, வெளியிட்டுள்ள நிலையில், உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால் வினியோக நிறுவனமான தங்களுக்கு மட்டுமல்லாமல் திரையரங்குகளுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

அத்துடன், படம் தடையின்றி திரையிடப்படுவதை உறுதி செய்ய உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுளவிடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில், வீரம் செறிந்த ஈழ விடுதலை போராட்டத்தையும், ஈழ தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியது என்றும், தமிழ்நாட்டில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Petition filed seeking protection for Tamil Nadu theaters where Vijay Deverakondas film Kingdom is being screened


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->