வேலூர் : நண்பனை பீர்பாட்டிலால் அடித்துக்கொன்ற வாலிபர்கள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
five peoples arrested for murder case in vellore
வேலூர் : நண்பனை பீர்பாட்டிலால் அடித்துக்கொன்ற வாலிபர்கள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே கோரப்பட்டரை பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற போலீசார் ரத்த காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்த நபர் கோரப்பட்டரை பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குணசேகரன் நண்பர்கள் 17 பேரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் குணசேகரனை கொலை செய்தது அவரது நண்பர்களான நரேஷ் குமார், பிரதாப் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களுடன் குற்றத்தில் ஈடுபட உதவிய பள்ளி மாணவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மாடு விடுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இருப்பினும், மூவரும் கடந்த 11ஆம் தேதி இரவு வழக்கம்போல் மது அருந்த தேவையான பொருள்களை வாங்கிவிட்டு அருகில் இருந்த மணல் மேட்டில் குடிப்பதற்காக சென்றுள்ளனர்.

அங்கு மது அருந்திய பின்னர் குணசேகரன், நரேஷ் குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பக்கத்தில் இருந்த பிரதாப் குணசேகரன் கைகளை பிடித்து வாயை பொத்தியுள்ளார். அந்த நேரத்தில் நரேஷ் பீர் பாட்டிலால் குணசேகரன் தலையில் அடித்துள்ளார். இதில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே குணசேகரன் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் துறையினர், கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
five peoples arrested for murder case in vellore