3வது முறையாக விழுந்த ஏரி கற்கள்.."ஊதுவத்தி ஆலை தீ விபத்துக்கு காரணம்".. சென்னை ஆய்வகத்திற்கு அனுப்ப முடிவு..!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ராமநாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு என்பவர் தெக்குப்பட்டு பகுதியில் பெரிய அளவில் ஊதுவத்தி தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெடி சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து அம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட ஊதுவத்தி கம்பெனியில் வேலூர் மாவட்ட தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ஜேம்ஸ் அந்தோணி ராஜ், ஓய்வுபெற்ற தடய அறிவியல் உதவி இயக்குநர் பாரி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வானில்ருந்து வந்த எரி கற்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதை அவர்கள் உறுதி செய்தனர். மேலும் ஊதுவத்தி கம்பெனியில் இருந்து சில எரி கற்களை மீட்டு அவற்றை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வானில் இருந்து எரிகல் தீப்பிழம்பாக எரிந்து வந்து விழுந்ததை சுற்று வட்டாரப் பகுதியில் இருந்த சிலர் பார்த்துள்ளனர். சுமார் 3 கி.மீ சுற்று வட்டாரத்தில் எரி கற்கள் விழுந்த தாக்கம் தெரிந்துள்ளது. அதேபோன்று விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட எரி கற்களை மீட்டு உள்ளனர்.

முதற்கட்ட ஆய்வில் அவை எரி கற்கள் என்று உறுதியானாலும் அவை முறையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. சேகரிக்கப்பட்ட எரி கற்களை சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு நீதிமன்ற அனுமதியுடன் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே ஏற்கெனவே இரண்டு முறை எரிகற்கள் விழுந்துள்ளன. தனியார் கல்லூரியில் விழுந்த எரிகற்களால் பயங்கர சேதம் ஏற்பட்டது. கல்லூரி வாகனங்கள், கண்ணாடிகள் நொறுங்கின.

ஊழியர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர். அதே பகுதியில் விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் எரி கல் விழுந்துள்ளது. இந்த நிலை தற்பொழுது மூன்றாவது முறையாக எரிக்கல் விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire accident in Tiruppathur due to falling of meteorite


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->