தந்தை கொலை, மகள் தற்கொலை...3 பேர் கைது...! - 8-வது நாளாக உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே வடக்கு நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (53), கடந்த 17-ம் தேதி நிலப் பிரச்சினை காரணமாகக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மூன்றடைப்பு காவலர்கள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தந்தை உயிரிழந்த துயரத்தில் அவரது மகள் பேபிகனி (23) இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், ஆறுமுகம் கொலையில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரின் உடல்களையும் வாங்க மறுத்து உறவினர்கள் 8-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, பேபிகனி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அதே ஊரைச் சேர்ந்த சூசைமுத்து, செல்வகுமார், ரமேஷ் ஆகிய 3 பேரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father Murdered Daughter Commits Suicide 3 Arrested Relatives Protest 8th Consecutive Day Refusing Accept Bodies


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->