போதை ஆசாமிகளுக்கு விழுந்த மரண அடி...! கோவையை அதிரவைத்த போலீசாரின் திடீர் வேட்டை...! 28 பேர் சிக்கியது எப்படி...? - Seithipunal
Seithipunal


கோவை மாநகரில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

அதன்படி, மாநகர காவல் ஆணையர் கண்ணன் வழங்கிய உத்தரவின் பேரில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் தங்கும் தனியார் விடுதிகள், கூரியர் நிறுவனங்கள், குடோன்கள், தனியார் ஆம்னி பேருந்து அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவலர்கள் ஒருங்கிணைந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சிறப்பு சோதனை நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று காலை வரை இடைவிடாமல் நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் இதில் பங்கேற்று, சந்தேகத்திற்கிடமான இடங்களை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதேவேளையில், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், மாநகர எல்லையை விட்டு வெளியேற்றப்பட்ட ரவுடிகளின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.

இந்த விரிவான சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 டன் புகையிலைப் பொருட்கள், 10 கிலோ கஞ்சா, 50 கஞ்சா சாக்லெட்டுகள், 300 போதை மாத்திரைகள் உள்ளிட்ட ஏராளமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கோவை மாநகர எல்லையை விட்டு வெளியேற்றப்பட்டிருந்த சண்முகம் என்ற ரவுடியையும் காவலர்கள் கைது செய்தனர்.

போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான இதுபோன்ற அதிரடி சோதனைகள் இனிவரும் நாட்களிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fatal blow drug addicts sudden police hunt that shook Coimbatore How 28 people caught


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->